hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Wednesday, 7 August 2013

ஈகோ ....அப்படின்னா!!!

சில பல தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஒரு பிரச்சனையில், ஈகோ பார்க்காதே...விட்டுக்கொடு என்று சொல்லி வந்தனர்...எனக்குப் புரியவில்லை! எந்த ஒரு விசயத்திலும் 'நான் தான்' என்ற மமதை என்றுமே பார்த்ததில்லை. ஒருவர் செய்வது எனக்கு உடன்பாடு இல்லையென்றால், சண்டை போடாமல் விலகிச் செல்வது எனது பழக்கம். ஒருவேளை, இதுவும் ஈகோ-வில் சேருமோ என்ற சந்தேகம் எனக்கு. அதிகம் பேசுவதில்லை, குறிப்பாக வீம்புக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவோரிடம் பேசாமல் அமைதி காப்பதும் என் பழக்கம். இதுவும் ஈகோ-வா? பேசாமல் இருப்பவர்களில் இருவகை...ஒன்று, தரம் பார்த்து இவனிடம் நமக்கு என்ன பேச்சு என்ற மமதையில் இருப்போர்...இரண்டாவது, இயற்கையிலேயே யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பவர்கள். இதில், நான் இரண்டாம் ரகம். இதில், என்ன வேடிக்கைன்னா, ஈகோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துற பலருக்கு, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்காது. ஈகோ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ஒருவரே ஒருதடவை அதன் அர்த்தம் பற்றிக் கேட்ட வேடிக்கையும் உண்டு. சரி, தமிழ் அகராதியில் இதற்கான அர்த்தம் என்னவென்றுதான் பார்த்து விடுவோம் என்று முடிவெடுத்து தேடுதல் வேட்டை ஆரம்பித்தது...

Ego - 'நான்' என்னும் முனைப்பு

Ego     n. individual's perception or experience of himself,the I or self of any perosn, தான் என்னும் எண்ணம்;நான் என்னும் முனைப்பு; egocentric,a.selfcentred,egoistic, தன்முனைப்புள்ள; egoism,n .conceit, தன் முனைப்பு; systematic selfishness, தன்னல வேட்கை நெறி; egoist,n . தற்புகழ்ச்சியாளர்;தன்முனைப் பாளர்; egoistic al ,a . தன்முனைப்புள்ள;தற் பெருமை காட்டுகிற; egoistically,adv.egotheism,n . நானே கடவுள் எனல்; egotism,n .practice of talking about oneself, தற்பெருமை கூறுதல்; egotist,n .self-centred person, தற்பெருமையாளர்; egotistic (al) ,a . தற்பெருமை பேசுகிற;இறுமாப்பான; egotistically,adv.egotize v . தன்மை மிகுத்துப் பேசு. 

Egoism -  தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு, தான் என்ற எண்ணம், தன்னலவேட்கை நெறி, தன்னலம், தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்

திமிர் - arrogance   n. insolent pride, இறுமாப்பு, திமிர், அகந்தை; haughtiness, கர்வம்; arrogant,a.proud, தருக்கு நிறைந்த; haughty, திமிரான,கர்வம் மிகுந்த; behaving in a proud manner, திமிராக நடந்துகொள்கிற; arrogancy,n . தான்தோன்றித்தனம்; தன்முனைப்பு; arrogantly,adv. திமிராக.
(நன்றி: http://www.tamilvu.org/library/dicIndex.htm)

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை வைத்துப் பார்த்தால், ஈகோ என்றால் 'நான்' என்ற அகந்தை, திமிர், இறுமாப்பு, ஆணவம், கர்வம் பார்ப்பது போன்றவற்றை பொதுவாகச் சொல்லலாம். மற்றபடி, தன்னலம், தற்பெருமை பேசுதல் போன்றவை எல்லாம் 'ஈகோ'-வில் சேருமா என்ற சந்தேகம்....ஏனென்றால், ஆங்கிலத்தில் இதற்குத் தனியா பெயர்கள் உண்டு. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஈகோ-வுக்கு 'a person’s sense of self-esteem or self-importance' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சுயகவுரவம், கர்வம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 

ஆகையால், ஈகோ என்ற வார்த்தையை அதன் அர்த்தம் உணர்ந்து பொருத்தமான இடத்தில் பயன்படுத்தினால் நல்லது என்பதே என் தாழ்மையான கருத்து. உங்களுடைய கருத்து வேறுபட்டிருக்குமானால், தெரியப்படுத்துங்கள்...
 

No comments:

Post a Comment